நவாஸ் ஷெரீப் மனைவிக்கு மாரடைப்பு – பாகிஸ்தான் மக்கள் பிரார்த்திக்குமாறு மகள் வேண்டுகோள்..!
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவ்வகையில், நேற்று வாஸ் ஷெரீப், மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்று சேருவதற்குள் நேற்று பின்னிரவில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குல்சூம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டுள்ள குல்சூம் சுயநினைவை இழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
தனது தாயார் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்குமாறு நவாஸ் ஷெரீப் மகள் மரியம் ஷெரீப், மகன் ஹுசைன் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் சார்பில் பாகிஸ்தான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனையின் பலம் மிகவும் வல்லமையானது என்பதால் ரம்ஜான் நோன்பை நிறைவு செய்துள்ள பாகிஸ்தான் மக்கள் அனைவரும் குல்சூம் ஷெரீப் குணமடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.