சென்னை அருகே வீட்டில் திருட பொருள்கள் இல்லாததால் சிசிடிவி கேமராவை திருடிச் சென்ற கொள்ளையர்கள்!
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும், அதற்கான உபகரணத்தையும் கொள்ளையர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் திருடிச் சென்றனர்.
கோட்டூர்புரம் கார்டனில் வசித்துவரும் அப்துல்லா என்பவர், ரம்ஜானுக்காக வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊர் சென்றுள்ளார். இந்நிலையில், அப்துல்லாவின் ஓட்டுநர் இன்று காலை வீட்டிற்கு வந்த போது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து சோதனையிட்ட போது, வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும், அதற்கான உபகரணங்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.