IND vs AFG Test match:சீட்டுக்கட்டுபோல் சரிந்த ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள்!இந்திய அணி அபார பந்துவீச்சு!

Default Image

நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்கியது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பின்னர் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் விஜய் களமிறங்கினர்.தொடக்க முதலே அதிரடியாகிய விளையாடிய தவான் 87 பந்துகளில் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார்.பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்கான் வீரர் ரஷித் கான் ஓவரை தவான் வெளுத்து வாங்கினார்.

ரஷித் கான் 7 ஓவரில் 51 ரன்கள் கொடுத்துள்ளார்.மேலும் தவான் புதிய சாதனையை படைத்துள்ளார்.இந்திய வீரர்களில் இதுவரை யாரும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் சதம் அடித்ததில்லை.அந்த சாதனையை முதல் இந்திய வீரராக தவான் செய்தார்.

பின்னர் தவான் 107 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இந்திய அணி 46.4 ஓவர்களில் 258 ரன்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.ராகுல்(41), விஜய்(94) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 104.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான்(107),விஜய்(105),ராகுல்(54),பாண்டியா 71 ரன்கள் அடித்தனர்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 12.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 50 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்