எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வீராங்கனைகளை பாஜக எம்.பி  துன்புறுத்தியுள்ளார்.! டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்.! 

BJP MP Brij Bhushan Saran Singh

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பொறுப்பில் இருந்த போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது வீராங்கனைகள் குற்றம்சாட்டின. அவர் எம்பியாக இருப்பதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

பல்வேறு போராட்டங்களை அடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வீராங்கனைகள் கொடுத்த புகாரின் பெயரில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் புகார் குறித்த விசாரணையை டெல்லி காவல்துறையினர் மேற்கொண்டனர், இந்த வழக்கு தொடர்பாக மற்ற சாட்சியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 23 சனிக்கிழமை அன்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா,  பிரிஜ் பூஷன் சரண் சிங், தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் மல்யுத்த வீராங்கனைகளின் அமைதியை சீண்டுவதையும், அவர்களை துன்புறுத்துவதையும் செய்து வந்துள்ளார்.

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நீதிமன்றத்திற்கு முழு  அதிகாரம் உள்ளது என்றும் ஸ்ரீவஸ்தவா வாதிட்டார். இதற்கு பத்தி வாதமாக, இந்தியாவிற்கு வெளியே நடந்த வழக்குகளுக்கு CrPC இன் பிரிவு 188 இன் கீழ் அனுமதி வாங்கி தான் விசாரிக்க வேண்டும் என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு எதிராக வாதிட்ட டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, அனைத்து புகார்களும் வெளிநாடுகளில் நடந்தால் மட்டுமே சிறப்பு அனுமதி தேவை, ஆனால் இங்கே பல்வேறு புகார்கள் இந்தியாவுக்குள் நடந்தவை அதனால் அதற்கு இந்த அனுமதி தேவையில்லை என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்