தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்.! ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஆலோசனை.!
இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. அதன்படி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசிய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர், காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் செப்டம்பர் இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்று அறிவித்தார். ஏனெனில் தேர்தல் அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிற நிலையில், கூட்டணி பலனளிக்கவில்லை என்றால், 119 தொகுதிகளிலும் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய கூட்டத்தின் போது ஒய்.எஸ்.ஷர்மிளா அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், கட்சித் தலைவர் தொண்டர்களுக்கு அவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.