ஆசிய விளையாட்டு போட்டி: முதல் தங்கம் வென்று உலக சாதனையை படைத்தது இந்தியா!

Air Rifle india Team

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். சீனாவில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடந்த ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டில் திவ்யான்ஷ் சிங், பிரதாப் சிங் தோமர், பாலாசாகேப் பாட்டீல் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. அத்துடன் 1893.7 புள்ளிகளை எடுத்த புதிய உலக சாதனையை ஒன்றையும் படைத்துள்ளது.

அது மட்டும் இல்லாமல், தங்கப்பதக்கத்தை தொடர்ந்து இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. நான்கு நபர் கொண்ட துடுப்பு படகுப் போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய அணி 6ஆவது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்