நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக கட்சியின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது ” திருப்பூரில் தொண்டர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொண்டர்களை பார்க்கும்போது களைப்பு நீங்கி உற்சாகமான மனநிலையோடு நான் இருப்பதாக உணர்கிறேன். அந்த அளவிற்கு மகிழ்ச்சியாகவும் மனதிற்கு சந்தோசமாகவும் இருக்கிறது. அடுத்ததாக நாங்கள் இந்திய நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலின் தொடக்க புள்ளியாக தான் நாங்கள் முகவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை எப்போதும் மறந்துவிட கூடாது. முகவர்களின் முதல் கடமை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது தான்.
நாற்பதும் நமதே, நாடும் நமதே என நான் கூறியிருக்கிறேன் அதற்கான காரணம் என்னவென்றால், உங்களுடைய மீது நான் வைத்துள்ள அளவுக்கடந்த அந்த நம்பிக்கைத்தான் எனவே, இன்று முதல் நாம் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற எண்ணத்தை மனதில் வைத்துகொன்டு மிகவும் கம்பீரமாகநீங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.