தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க கூடாத தகுதி இல்லாத கட்சி பாஜக.! முதல்வர் மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஆனது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பொறுப்பாளர்களின் கடமையை எடுத்துக்கூறிய முதல்வர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “பாஜக மேடைக்கு மேலே ஏறி கொடுத்த வாக்குறுதிகளை எதையாவது ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா.? தமிழ்நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதிகள் யாது நிறைவேற்றினார்களா.? இல்லை. சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறதா.?”
“டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவானது. எல்லாம் பத்திரமாக வெறும் வாக்குறுதிகளாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் தன்னுடைய ஆட்சியின் சாதனை பற்றி பேசாமல், சந்திராயன் மற்றும் ஜி 20 மாநாடு குறித்து பேசுகிறார். இந்த இரண்டும் தான் பெரிய சாதனையாக சொல்கிறார். பிரதமர் மோடியிடம் அவருடைய ஆட்சியின் சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.”
“அதனால் தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார்கள். இதை வைத்து ஏதாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என்று நினைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திறனற்ற பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க கூடாத தகுதி இல்லாத கட்சி. அதனால்தான் அடிமை அதிமுகவை பயமுறுத்தி அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது.”
“அவர்கள் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கிறார்கள். ஆனால் உள்ளே நட்பாக இருக்கிறார்கள். இதுவரை மக்களை ஏமாற்றிய பாஜக அதிமுக இந்த தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட இருக்கிறது. மத்தியில் 2வது முறையாக ஆட்சி செய்யும் பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வரப்போவதில்லை.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.