நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி சண்டையிடுமா.?- வீரலட்சுமிக்கு சீமான் பதிலடி.!

Seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி புகார் கூறி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். இதற்கு தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார். இந்த புகாரை அடுத்து, நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் வீரலட்சுமி சீமானை விமர்சித்து வந்தார். அதன்பின் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. முதலில் சீமானுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். இதனையடுத்து சீமான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்து. இதற்கிடையில் நடிகை விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதன்பிறகு, விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட வீரலட்சுமி நீதிமன்றத்தில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். மான நஷ்டஈடு வழக்கு எல்லாம் மானம் உள்ளவர்களுக்கு தான் போட முடியும். வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கூறியிருந்தார்.

என் கணவருடன் பாக்ஸிங் செய்யுங்கள்:

இதற்கு வீரலட்சுமி சவால் விடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய கணவரிடம் பாக்ஸிங் செய்ய வருமாறு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “நீங்கள் ஊடகவியலாளர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் ஒரு பெண் என்று பார்க்காமல் இழிவாக பேசினீர்கள். ஆனால் என் கணவர் உங்களைத் தொடர்பு கொண்டு ஒருவரும் பாக்ஸிங் செய்யலாமா என்று கேட்டதற்கு உங்களுக்கு பதில் சொல்ல வீரமில்லை. ஊடகவியலாளர்கள் மத்தியில் வைக்கப்படும் மைக் முன்னாடி பேசும் போது தான் உங்களுக்கு வீரம் வருமா? ” என்று கேட்டுள்ளார்.

மேலும், “இப்போது நான் நிக்கும் இடம், அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் தொட்டிக்களை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த மைதானத்தில்தான் நீங்கள் என் கணவருடன் சண்டை போடா வேண்டிய இடமாக தீர்மானித்துளோம். இதற்கான தேதி எப்பொழுது என்றால் 2024 தை மாதம் காணும் பொங்கல் அன்று என்னுடைய கணவருக்கும் உங்களுக்கும் சண்டை நடக்கப்போகிறது.”

“இதில் பாக்ஸிங், கராத்தே, குங்ஃபூ, மல்யுத்தம் என எந்த சண்டையை வேண்டுமானாலும் போடுங்கள். அனைத்தையும் சமாளிக்க அவர் தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ அவர்கள் தோல்வி அடைந்ததற்கு சமம். அந்த போட்டியில் என்ன பந்தயம் என்பதை போட்டி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மக்களுக்கு அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

பதிலடி கொடுத்த சீமான்:

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் என்னை அனைவரும் வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இருந்தாலும் நான் புலி’ பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி சண்டையிடுமா.? இல்லை பேசாமல் போகுமா.? அதை மட்டும் யோசித்துக் கொள்ளுங்கள். சிவபெருமான் எழுதிக் கொடுத்த பாடலில் நக்கீரன் குறை சொல்லி விடுவார். அதில் தருமி, பாட்டு எழுதி புகழ் பெறும் புலவர்களும் உண்டு, அதில் குற்றம் குறை கண்டு புகழ் பெறும் புலவர்களும் உண்டு என்று கூறுவார்.”

“அதேபோல என்னை எதிர்த்து பேசுவதில் உங்களுக்கு ஒரு அடையாளம், என்னை எதிர்க்க வேண்டிய தேவை, என்னை விமர்சித்து பேச வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது. எனக்கு உங்களை எதிர்த்துப் பேச வேண்டிய, விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. என்னை எதிர்க்கிறவன் எல்லாம் எனக்கு எதிரி இல்லை. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என்னுடைய எதிரி. நான் ஏற்கனவே என் எதிரி யார், என் இலக்கு, என் பயணம் எது என்பதை தீர்மானித்து விட்டேன். இதெல்லாம் வெட்டிப் பேச்சு.” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்