கோவை சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருப்பூரில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் நடைபெறும் சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்தார். கோவையின் விளாங்குறிச்சியில் சாலை பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு நேரில் சென்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
5,8வது வார்டுகளில் நடக்கும் சாலை பணிகளை தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். நடந்து சென்று பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்த பிறகு தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வு நடத்திய போது முதலமைச்சருடன் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கோவை மாவட்டத்தின் ஆட்சியரான கிராந்திகுமார் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு சென்ற காரணம் என்னவென்றால், திமுக கட்சியின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ள காரணத்தால் அதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இன்று காலையே விமான நிலையத்திற்கு சென்ற அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.
இந்த மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திமுகவின் 14 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தான் முதல்வர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு இடையில் கோவையில் நடைபெறும் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தற் என்பது குறிப்பிடத்தக்கது.