Thirumavalavan: அண்ணாமலையின் வன்மம் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – திருமாவளவன்

VCK Leader Thirumavalavan

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் தலைவர்கள் குறித்து பேசும் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி எதிர்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஜெயலலிதா முதல் அண்ணா வரை சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணாமலைக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும், அண்மையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேரறிஞர் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.

அதாவது, அண்ணாமலையில் கூறியதாவது, 1956-ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவு கருத்துகளை பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக எதிர்த்தார் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என எச்சரித்ததாகவும் கூறியிருந்தார். மேலும், அதற்கு பயந்து அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக, திராவிட இயக்கத்தினர் என பலரும் அண்ணாமலை சொன்ன விஷயம் பொய் எனக் கூறி, கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக, அதிமுகவினர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, அண்ணா பெயரை அண்ணாதுரை என அண்ணாமலை கூறி வருவதற்கும் பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பேரறிஞர் அண்ணா மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காழ்ப்புணர்ச்சி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர், தமிழ்நாடே அண்ணா அண்ணா என சொல்லும்போது, ஆனால், அண்ணாமலை மட்டும் அண்ணாதுரை என்று சொல்வது அவரது வன்மத்தை காட்டுகிறது.

அண்ணாதுரை என்பது அண்ணாவின் பெயர் தான். ஆனால், தமிழகத்தில் வழக்கத்திற்கு நேர்மாறாக வேண்டுமென்ற அண்ணாமலை பேசுவதில் இருந்து தெரிகிறது, எந்த அளவுக்கு அண்ணா மீது ஒரு வெறுப்பு இருக்கிறது, ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிகிறது. ஆகவே, அவர் அதை மூடி மறைக்க பாக்கிறார்.  எனவே, அண்ணாமலையின் வன்மம், காழ்ப்புணர்ச்சி தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்