ICC Ranking: மூன்று வடிவ கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம்.! சாதனை படைத்து அசத்திய இந்திய அணி.!
சமீபத்தில் நடந்து முடிந்த 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா மாற்று இலங்கை அணி மோதியது. அதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ந்து, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி 15.2 ஓவர்களிலேயே தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து, உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியா அணி உடன் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் தடுமாற்றமாக இருந்தாலும், பிறகு ரன்கள் குவிக்கத் தொடங்கியது
இறுதியில் 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 276 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி 71, 74 ரன்கள் என எடுத்து அவுட் ஆயினர்
கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் இந்தியா அணி 48.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஐசிசி ஒரு நாள் அணியின் தரவரிசையில் முதலிடத்தில் பிடித்துள்ளது. அதன்படி, இந்திய அணி 116 புள்ளிகள் என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை முந்தி, ஒரு நாள் அணியின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 115 புள்ளிகள் என்ற கணக்கில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் இந்திய அணி ஐசிசியின் மூன்று வடிவ போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்து, இந்திய அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதன்படி டி20ஐ, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
டி20ஐ அணிகள் தரவரிசை:
- இந்தியா – 264
- இங்கிலாந்து – 261
- பாகிஸ்தான் – 254
ஒருநாள் அணிகள் தரவரிசை:
- இந்தியா – 116
- பாகிஸ்தான் – 115
- ஆஸ்திரேலியா – 111
டெஸ்ட் அணி தரவரிசை:
- இந்தியா – 118
- ஆஸ்திரேலியா – 118
- இங்கிலாந்து – 115