காவிரி பிரச்சனை – செப்.27ல் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.. தேமுதிக தலைவர் அறிவிப்பு!
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து செப்.27ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தஞ்சாவூரில் தேமுதிகவில் சார்பில் வரும் 27ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
அதன்படி, செப்.27ம் தேதி தஞ்சை பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் கூறியுள்ளார்.