MKStalin Pride: மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

Tamilnadu CM MK Stalin

கடந்த செப்டம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்திற்கு தகுதியான பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10 பைசா முதல் ரூ.1 செலுத்து சோதனை செய்யப்பட்ட பிறகு, ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 1.6 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பயன்பெற்ற பெண்கள் எத்தகைய மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதல் அவசியம். அந்த வகையில் அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டு விடாமல் அனைவர்க்கும் அனைத்தும் கிடைபதற்கு திட்டக்குழு சீர்மிகு பணியாற்றி வருகிறது. சில முக்கிய கொள்கைகளை வகுக்கும் பனி திட்ட குழுவிற்கு உள்ளது. மின் வாகன கொள்கை, தொழில் 4.0 கொள்கை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை, சுற்றுலாக் கொள்கை கைத்தறி கொள்கை, தமிழ்நாடு மருத்துவ உரிமை கொள்கை போன்றவற்றையும் இறுதி செய்ய வேண்டும்.”

“அரசு சார்பாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் எந்த வகையில் மக்களுக்கு பயனளித்து வருகிறது என்பதை பார்க்க ஆய்வறிக்கை உதவியாக இருக்கிறது. மகளிர் இலவச விடியல் பயணத்தின் திட்டத்தை நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார உயர்வுகளை பார்க்கிறோம். மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 வரை சேமிக்கிறார்கள் என்பதைவிட பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது, சமூகத்தில் பங்களிப்பு அதிகரித்துள்ளது.”

“அதேபோல் நான் உங்கள் திட்டத்தின் தாக்கம் குறித்தும் திட்டக்குழு அறிக்கைகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் பயன்பாடு என்பது மிகமிக அதிகம். செலவீனத்தின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தை அளவிடாமல் பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதற்குத் திட்டக்குழு வழிகாட்டி வருகிறது. மகளிர் உரிமை தொகை மூலம் ரூ.1000 கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்கள் மூலம் வரக்கூடிய செய்திகள் மூலம் அறிகிறோம். அனைத்து ஊடகங்களும் பெண்களிடம் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்