Belly Problem : பிரசவத்திற்கு பின் தொப்பை பிரச்சனையா..? இதற்கு என்ன தீர்வு…?

pregnancy

பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதிலும் முக்கியமான பிரச்னை தொப்பை தான். இந்த பிரச்னையில் இருந்து விடுபட பெண்கள் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

பிரசவத்திற்குப் பிறகு தொப்பையை குறைக்க

உடல் எடை மற்றும் தொப்பை குறைக்க உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. உடற்பயிற்சி செய்வது தொப்பையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும். அதிக கலோரிகளை உட்கொள்வதைக் குறைத்து கொள்வது நல்லது. இது தொப்பையை குறைக்க உதவுவதோடு, ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

பிரசவத்திற்குப் பிறகு 6-8 வாரங்களுக்குப் பிறகு மெதுவாக உடற்பயிற்சிகளை தொடங்கலாம். உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்கள் செய்ய முயற்சி செய்யுங்கள். அவ்வாறு உடற்பயிற்சி செய்யும் போது ஏதேனும் வலியை உணர்ந்தாள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதேசமயம் உடற்பயிற்சிக்கு முன் மருத்துவரை ஆலோசித்து உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

கலோரி குறைந்த உணவுகள் 

கலோரி குறைந்த உணவுகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன, இதில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள் அடங்கும். அந்த வகையில், காய்கறிகளை பொறுத்தவரையில், கேரட், பீட்ரூட்,   கத்தரிக்காய், வெங்காயம், பச்சை பீன்ஸ், பூசணி, மற்றும் தக்காளி ஆகியவை கலோரி குறைந்த காய்கறிகள் ஆகும்.

பழங்களை பொறுத்தவரையில், ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, பப்பாளி, திராட்சை, மற்றும் பெர்ரி ஆகியவை கலோரி குறைந்த பழங்கள் ஆகும். பட்டாணி, பீன்ஸ், மற்றும் பயறு ஆகியவை கலோரி குறைந்த பருப்பு வகைகள் ஆகும். ஓட்ஸ், கம்பு, மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை கலோரி குறைந்த முழு தானியங்கள் ஆகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி மட்டுமல்லாது, உணவிலும் சில கட்டுப்பாடுகளை கைக்கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal