INDvAUS : பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி இன்று பலபரீட்சை.! ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு ஓய்வு.!
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அடுத்து உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மட்டுமே உலக கோப்பைக்கு முன்னர் நடைபெறும். டி20 கிரிக்கெட் தொடர் ஒருநாள் உலக கோப்பை முடிந்த பிறகு நடைபெற உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியானது இன்று (செப்டம்பர் 22) மொகாலியில் நடைபெற உள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டியானது துவங்க உள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பாக கேப்டன் பாட் கம்மின்ஸ் , ஸீன் அபாட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்கலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் 2 போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி சார்பாக கேப்டனாக கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்) , ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
2வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூர் கிரிக்கெட் மைதானத்திலும், 3வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்திலும் நடைபெற உள்ளது.