33% Reservation : பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா… மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!

Union Minister Arjun Ram Meghwal

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது கடந்த 18ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று பழைய நாடாளுமன்றத்தில் துவங்கியது. அன்றைய நாள் பழைய நாடாளுமன்றத்தில் இருந்து விடைபெறும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நன்றியுறையை செலுத்தினார்.

அதன் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை 19ஆம் தேயன்று  முதல், புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற ஆரம்பித்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலக அலுவல் பணியாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டது.

இந்த சட்ட மசோதா மீதான விவாதம் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்களும் இந்த மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை கூறினாலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவையே தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை சட்ட மசோதாவானது மக்களவையில் பெருவாரியான வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையில் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் இந்த சட்டமசோதாவுக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாலாம் பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 215 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது வரலாற்று நிகழ்வு என மாநிலங்களவை தலைவர் குறிப்பிட்டு பேசினார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படட்டதை தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அந்த சட்ட மசோதா செயலாக்கம் பெரும். மக்கள் தொகை கனக்கடுப்பு, மக்களவை தொகுதிகள் மறுவரையறை ஆகியவை செய்த பின்னர் 2026இல் இந்த மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்