MakkalNeedhiMaiam: மக்களவை தேர்தல் பணிகள் – நாளை கமல் ஆலோசனை!
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால், எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் செயல்பாடுகள் பார்க்கும்போது, திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைப்பாரா என கேள்வி எழுந்தது. இந்த சமயத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் செயல்படுத்தி வருகிறார்.
கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். இந்த நிலையில், மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், செயற்குழு நிர்வாகிகளுடன் கோவையில் கமல்ஹாசன் நாளை மேற்கொள்ளவுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ள கமல்ஹாசன்.