Thyroid : தைராயிடு பிரச்னை உள்ளவரா நீங்கள்..? அப்ப மறந்தும் இதெல்லாம் சாப்பிட்றாதீங்க..!

thyroid

தைராய்டு என்பது கழுத்தில் உள்ள  ஒரு வகையான சுரப்பி. இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாததினால் ஏற்படக்கூடியது ஆகும். இது இரண்டு வகைப்படும். அவை, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் ஏற்படக்கூடியது. ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்திசெய்தால் ஏற்படக்கூடியது.

அறிகுறிகள் 

ஹைப்போதைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு சோர்வு, எடை அதிகரிப்பு, குளிர் உணர்வு, மலச்சிக்கல், தோல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னை ஏற்படும். அதேபோல், ஹைப்பர் தைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை இழப்பு, அதிக இதயத் துடிப்பு, வியர்வை, தூக்கமின்மை, கைகள் மற்றும் கால்களில் நடுக்கம், மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் 

கொழுப்பு நிறைந்த உணவுகள் தைராயிடு ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தடுக்க கூடும்.  இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, முழு கொழுப்பு பால் மற்றும் சீஸ் ஆகியவை இந்த கொழுப்பு நிறைந்த உணவுகள் அடங்கும். அதேபோல், காபி மற்றும் ஆல்கஹால் தைராயிடு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்க கூடும் எனவே இந்த உணவுகளை தடுப்பது நல்லது.

இனிப்பான உணவுகளில் கால்சியம் அதிகமாக காணப்படும் என்பதால், அதிகப்படியான இனிப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சாப்பிடவேண்டிய உணவுகள் 

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள், தைராயிடு ஹார்மோன்கள் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அவசியமானது. எனவே அயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அயோடின் நிறைந்த உணவுகளில் மீன், கடல் உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.

தைராயிடு ஹார்மோன்களின் உற்பத்திக்கு புரதம் தேவைப்படுகிறது. இறைச்சி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் புரதம் நிறைந்த உணவுகளாகும். தைராயிடு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவு முறையை மிகவும் கவனமாக கடைபிடிப்பது அவசியமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
virender sehwag ms dhoni
iran trump
MIvsKKR
Sekarbabu
sengottaiyan
Ruturaj Gaikwad