NEETPG: நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மார்க் பூஜ்ஜியம் – இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!
நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3-ஆவது கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3-ஆவது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை உறுதி செய்யவே நீட் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வின் அர்த்தத்தையே மத்திய அரசின் அறிவிப்பு கேலிக்கூத்தாக்கி விட்டதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மத்திய அரசின் அறிவிப்பால் நீட் தேர்வு நடத்தப்படுவது அர்த்தமற்றதாக மாறிவிட்டது என்றுள்ளனர்.