Parliment : நாடாளுமன்றத்தில் கடைசியாக ஒலித்த மொழி தமிழ்.! வரலாற்றில் இடம் பிடித்த திருமாவளவன்.!

VCK MP Thirumavalavan - Indian Parliment

நமது நாடு சுதந்திரம் பெற்றது முதல் இந்திய பாராளுமன்றமாக டெல்லியில் செயல்பட்டு வந்த ஆங்கிலேயர் காலத்து கட்டடத்திற்கு நேற்று முன்தினம் நாடளுமன்ற உறுப்பினர்கள் பிரியா விடை கொடுத்தனர்.  தற்போது டெல்லியில் மத்திய அரசால் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தில் அலுவல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முதல் நாள் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது. முதல் நாள் முதல் அலுவலாக நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர்  அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இன்று இரண்டாவது நாளாக அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

பழைய நாடாளுமன்றத்திற்கு கடந்த திங்கள் கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாக உரையாற்றினார்கள். அதில் இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

இறுதியாக அவர் பேசுகையில், தமிழில் உரையாற்றினார். அதன் பிறகு பழைய நாடாளுமன்ற அலுவல்கள் முடிந்ததாக சபாநாயகர் அறிவித்து விட்டார். இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடத்தில் கடைசியாக ஒலித்த குரல் தமிழ் என்பதும், அதனை பேசியவர் திருமாவளவன் என்பதும் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO
IRE vs IAND