STR48 : நான் ரொம்ப பிஸி! சிம்பு படத்தை உதறி தள்ளிய அனிருத்?
தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் பல பெரிய படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து கொடுத்து வருகிறார். அவருடைய இசையில் வெளியாகும் படங்களை பார்க்கும் போதும் கதையுடன் அவருடைய இசையும் மக்களுக்கு பிடித்து போக அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக குவிந்து வருகிறது. இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து விட்டார்.
ஆனால், இதுவரை ஒரு முறை கூட சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைத்து கொடுத்ததே இல்லை. இந்த நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் STR48 படத்திற்கு இசையமைக்க முதலில் இசையமைப்பாளர் அனிருத்திடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாம்.
ஆனால், இசையமைப்பாளர் அனிருத் தான் மிகவும் பிசியாக இருப்பதாகவும் தன்னிடம் பல படங்கள் கைவசம் வைத்திருப்பதாகவும், கூறி படத்தில் இசையமைக்க முடியாது என மறுத்துவிட்டாராம். அப்படியே இசையமைத்து கொடுத்தால் கூட படத்தின் பாடல்கள் வருவதற்கு கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்து மறுப்பு தெரிவித்து விட்டாராம்.
சிம்பு அனிருத் கூட்டணி இணைந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த தகவல் அவர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனிருத் முன்னதாக ஒரு பேட்டியில் சிம்புவுடன் விரைவில் இணைந்து ஒரு படம் செய்வேன் எனவும் எங்களுடைய காம்போ பயங்கரமாக இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இப்படியான சூழ்நிலையில் அனிருத் STR48 திரைப்படத்திற்கு இசையமைக்க வில்லை என்ற தகவல் பரவி வருவதால் சிம்பு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். விரைவில் இந்த திரைப்படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்க போகிறார் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.