RIP Meera: விஜய் ஆண்டனி மகள் மறைவு – “லியோ” படத்தின் அப்டேட்டை ஒத்திவைத்த படக்குழு!

Meera - VijayAntony - LEO

விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, லியோ படத்தின் போஸ்டர் இன்று வெளியாக இருந்த நிலையில், நாளை வெளியாகும் என குறிப்பிட்டு படக்குழு ஒத்திவைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க இந்திய சினிமாவை மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது.

அதன்படி, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லியோ படத்தின் அப்டேட் எப்போது தான் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று முன் தினம் முதல் அந்தந்த திரையுலகின்  போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இதுவரை தெலுங்கு மற்றும் கன்னட சினிமா போஸ்டர்கள் வெளியான நிலையில், ஹிந்தி சினிமா போஸ்டர் வெளியாக இருந்தது. ஆனால், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லியோ படக்குழு X தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “உங்களுக்கு நிகழ்ந்த பேரிழப்புக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் பிரார்த்தனைகள். இன்று வெளியாக இருந்த லியோ போஸ்டரை நாளை வெளியிடுவதே சரியான முடிவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்