Blood : ஒரே வாரத்தில் உங்கள் உடலில் இரத்தம் அதிகரிக்க இதை சாப்பிடுங்க..!

Suvarotti Fry

சுவரொட்டி என்பது ஆட்டு இறைச்சியின் ஒரு பகுதியாகும், இது ஆட்டின் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. சுவரொட்டியை வைத்து  பெரும்பாலும் வறுவல், குழம்பு தயார் செய்கின்றனர். இந்த சுவரொட்டியில், புரதம், இரும்பு, துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இந்த சுவரொட்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,குறிப்பாக உடலில் இரத்த அளவை அதிகரிக்க பயன்படுகிறது. தற்போது இந்த சுவரொட்டி ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • சுவரொட்டி – 250 கிராம்
  • எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 நறுக்கியது
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிது, பொடியாக நறுக்கியது

செய்முறை 

சுவரொட்டியை துண்டுதுண்டாக வெட்டி சமைப்பதற்கு முன், அதனை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சுவரொட்டி வெந்ததும், தண்ணீரை வடித்துவிட்டு, நமக்கு தேவையான அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : Potato Ring : உருளைக்கிழங்கில் அசத்தலான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி..!

ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி சூடான பின், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

சுவரொட்டி சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சுவரொட்டி வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.இப்பொழுது  சுவையான சுவரொட்டி கிரேவி தயார்.

இந்த கிரேவியை, இரத்தம் குறைவாக உள்ளக உள்ளாவார்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலில் இரத்த அளவு அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்