Simbu: கொரோனா குமார் பட வழக்கு! ரூ. 1 கோடியை திரும்ப செலுத்தத் தேவையில்லை – சிலம்பரசன்!
நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு ரூ.4.50 கோடி கொடுத்த நிலையில், படத்தை முடித்துக்கொடுக்காததால் பணத்தை திருப்பி தரவேண்டும் எனவும், இல்லயென்னறால் படத்தில் நடித்துக்கொடுக்கவேண்டும் எனவும் வேல்ஸ் பட நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 29 அன்று விசாரணைக்கு வந்த போது, 1 கோடி கொடுத்தற்கான ஒப்பந்தம் மட்டும் தான் நிதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மற்ற செலவு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனையடுத்து, சிம்பு அந்த ஒரு கோடியை மட்டும் செலுத்த உத்தரவிட முடியும் என கூறி அந்த 1 கோடி ரூபாய் பணத்தை சிம்பு செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் 1 கோடி ரூபாய் பணத்தை செலுத்தவேண்டும் எனவும், அப்படி செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்டமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ஒப்பந்தப்படி ஓராண்டிற்குள் படப்பிடிப்பு தொடங்கவில்லையென்றால், ரூ. 1 கோடி முன்பணத்தை செலுத்த தேவையில்லை என பதிலளித்துள்ளார். என் மீது தவறு இல்லாததால் பணத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை என்று கொரோனா குமார் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு விளக்கம் அளித்துளள நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.