PM Modi : சிந்தனைகள் பெரியதாக இருந்தால் பிரமாண்டமான இந்தியாவை உருவாக்க முடியும்.! புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.! 

PM Modi speech in New Indian Parliment

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது.

நேற்று பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, இன்று புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் கூறுகையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விடைபெறுவது என்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.

புதிய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், நடைபெறப்போகும் ஒவ்வொரு விவாதமும், இந்தியாவை மேம்படுத்த வேண்டும். இது நமது பொறுப்பும் ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பும் ஆகும். இங்கு என்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட்டாலும், இந்தியாவின் முன்னேற்றம் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒரு சிறிய எண்ணத்தோடு  பெரிய இலட்சியத்தை அடைய முடியாது. நம் சிந்தனைகள் பெரிதாக இருக்க வேண்டும். அப்போதுதான்  பிரம்மாண்டமான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்.

இன்று இந்தியா புதிய உணர்வால் நிரம்பியுள்ளது. ஆற்றல் இந்த உணர்வு மற்றும் ஆற்றல் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தீர்மானங்களாக மாற்றி அந்த தீர்மானங்களை நனவாக்கும். இங்குள்ள சிலர் அப்படி நினைக்காமல் இருக்கலாம், ஆனால் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக உயரும் என்பதில் உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது.

தற்போது இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் செல்கிறது. பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370வது சட்டப்பிரிவு இந்த நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படுவது நமது அதிர்ஷ்டம்.

வளர்ந்த இந்தியாவின் பார்வைக்கு உயிர் கொடுப்போம் என்ற உறுதிமொழியுடன், இன்று புதிய நாடாளுமன்றத்திற்கு செல்கிறோம். அது நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது மற்றும் நமது கடமைகளுக்கு நம்மை ஊக்குவிக்கிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக நாங்கள் மீண்டும் உறுதிஏற்கிறோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்