‘சூப்பர் உமன்’ என பெயரெடுத்த மூதாட்டி ..!
மத்தியப் பிரதேசத்தில் 72-வயதானபோதும், மூதாட்டி ஒருவர் அதிவேகமாக டைப்பிங் செய்து ‘சூப்பர் உமன்’ என பெயரெடுத்துள்ளார். செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 72 வயதான மூதாட்டி லக்ஷ்மி பாய், படிவங்கள், விண்ணங்கள், கோரிக்கை மனுக்களை இந்தியில் டைப் செய்து தருகிறார்.
அதிவேகமாக டைப் செய்யும் அவரது வீடியோவைக் கண்டு, திறமையை வியந்த கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கற்றுக் கொள்ள வயது தடையில்லை என்பதற்கும், லட்சுமி பாயின் சுறுசுறுப்பைக் கண்டு இளைஞர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் உமன் எனக்கூறி ட்விட்டரில் தன்னை பற்றிய தகவலை பகிர்ந்த சேவாக்குக்கு நன்றி தெரிவித்த மூதாட்டி, தமது மகள் விபத்தில் சிக்கியபோது பெற்ற கடனை அடைக்கவே பணி செய்வதாக குறிப்பிட்டார்.