Rain Alert: வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், ஆந்திர பிரதேசம், யானம் கடலோர பகுதிகளின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இது நாளை (செப்டம்பர் 20)ஆம் தேதி கரையைக் கடந்து அடுத்த ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நகரக்கூடும்.
கரையைக் கடந்து பின், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் புறப் பகுதிகளும் பருவமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.