Chandrababu : நடிப்பிலும் சம்பளத்தில் சிவாஜியை ஓரம் கட்டிய சந்திரபாபு! எந்த படத்தில் தெரியுமா?

sivaji ganesan and actor Chandrababu

கமர்ஷியல் கதைக்கு எமோஷலாக நடிக்கவேண்டும் என்றால் சிவாஜி கணேஷினின் படங்களை பார்க்கலாம். அதைப்போல காமெடியாக நடிக்கவேண்டும் என்றால் சந்திரபாபு நடித்த படங்களை பார்க்கலாம். அந்த அளவிற்கு இருவருமே இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக இருக்கிறார்கள். ஒரு சமயம் சிவாஜி ஒரு பக்கம் ஹீரோவாக நடித்து வந்துகொண்டிருந்த சமயத்தில் சந்திரபாபு  தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவருவரில் யார் சிறந்த நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு இரண்டு பேரும் அருமையான நடிகர்கள். இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள். அப்படி ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது அந்த படத்தில் சிவாஜியை விட சம்பளம் அதிகமாக வாங்கியது மட்டுமின்றி நடிப்பில் சிவாஜியையே ஓரம் கட்டியுள்ளார்.

அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் பிஆர் பந்துலு இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளியான “சபாஷ் மீனா” திரைப்படம் தான். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் 2 வேடங்களில் சந்திரபாபு நடித்திருப்பார். இதில் அவர் நடித்த ரிக்ச்சா காரர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது.

இந்த படத்தில் சிவாஜி கணேசனை நடிப்பில் நடிகர் சந்திரபாபு ஓரம் கட்டியிருப்பாராம். இதனை பலமுறை சிவாஜி கணேசன் தனது நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறாராம். அது மட்டுமின்றி, இந்த படத்தில் நடிக்க சந்திரபாபு சிவாஜியை விட அதிகமாக வாங்கினாராம். சிவாஜியை விட 1 ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கினாராம். இந்த தகவலை மருத்துவரும் சினிமா ஆய்வாளருமான கந்தராஜ் தெரிவித்துள்ளார்.

1958 ஆம் ஆண்டு வெளியான “சபாஷ் மீனா” திரைப்படத்தில்  சிவாஜிகணேசன் மற்றும் சந்திரபாபுவுடன் பி.ஆர்.பந்துலு, டி.பாலசுப்ரமணியம், நடராஜன், மாலினி, பி.சரோஜாதேவி,  உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma