INDvAUS : உலகோப்பைக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலபரிட்சை.! கே.எல்.ராகுல் தலைமையில் கிரிக்கெட் அணி அறிவிப்பு.!  

INDvsAUS ODI Series squad

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இந்திய அணி கடந்த ஞாயிற்று கிழமை சாம்பியன் பட்டம் வென்றது. அதே புது தெம்புடன் அடுத்து உலக கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது.

அதற்கு முன்னதாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மட்டுமே உலக கோப்பைக்கு முன்னர் நடைபெறும். டி20 கிரிக்கெட் தொடர் ஒருநாள் உலக கோப்பை முடிந்த பிறகு இரு அணிகளும் விளையாட உள்ளது.

இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் செப்டம்பர் 22ஆம் தேதி மொகாலியில் வைத்து நடைபெற உள்ளது , 2வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 3வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.   பாட் கம்மின்ஸ் தலைமையில், ஸீன் அபாட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்கலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள முதல் 2 போட்டிகளில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் 2 போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் தலைமையில்,  ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்) , ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

3வது ஒருநாள் போட்டிக்கான அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்