வீட்டிலேயே கொத்து புரோட்டா செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

parotta

நம்மில் பெரும்பாலனவர்கள் கொத்து புரோட்டா என்றாலே மிகவும் பிரியமான ஒன்று  .இந்த புரோட்டாவை நாம் அதிகமாக கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, நாம் எதிர்பார்க்க கூடிய தூய்மை, ஆரோக்கியம் இவை கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தலான கொத்து புரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • பச்சமிளகாய் – 2
  • இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • கரம் மசாலா – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • முட்டை – 1
  • புரோட்டா – 2

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்  ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு அதனுள் மிளகாய் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் ஒரு முட்டையை ஊற்றி கிளறி கொள்ள வேண்டும். அதன் பின் நாம் செய்து வைத்துள்ள அல்லது கடையில் வாங்கிய புரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இந்த கலவையினுள் சேர்த்து நன்கு கிளறி, டம்ளரை வைத்து கொத்தி விட்டால், சுவையான கொத்து புரோட்டா ரெடி.

நாம் கடையில் வாங்கி சாப்பிடுவதைவிட வீட்டில் செய்து சாப்பிடும் போது திருப்தியாகவும் சாப்பிடலாம். இவ்வாறு நாம் செய்து சாப்பிடும்போது குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
virender sehwag ms dhoni
iran trump
MIvsKKR
Sekarbabu
sengottaiyan
Ruturaj Gaikwad