JailerSuccessCelebrations : ஜெயிலர் வெற்றிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக் விவரம்….100 கோடி எல்லாம் சும்மா கதை தானா?

kalanithi maran gift

இயக்குனர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு செக் மற்றும் கார்களை பரிசாக வழங்கி இருந்தார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு படத்தின் லாபத்தில் இருந்து வந்த பங்கில் இருந்து காசோலையை வழங்கி பிறகு பிஎம்டபிள்யூ (BMW x7) காரை பரிசளித்தார். அதன்பிறகு படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு காசோலை மற்றும் போர்ஷே (Porsche) காரும் காசோலையும் வழங்கப்பட்டது. அதைப்போல  படத்தின் இசையமைப்பாளரான அனிருத்திற்கும் காசோலையுடன் போர்ஷே (Porsche) காரும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த காசோலைகளில் எவ்வளவு பணம் கலாநிதி மாறன் கொடுத்திருப்பார் என பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட காசோலையில் 30 கோடி எனவும் அண்ணாத்த படம் சரியாக போகவில்லை என்ற காரணத்தால் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து கலாநிதி மாறன் 30 கோடி பணம் செக்ஆக கொடுத்து முடித்துவிட்டாராம்.

அதைப்போல, படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு 2 கொடுக்கப்பட்டுள்ளதாம். படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கலாநிதி மாறன் கொடுத்துள்ள இந்த காசோலைக்கான தகவல்  வலைப்பேச்சு யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த அந்த காசோலை 100 கோடி ரூபாய் என வதந்தி தகவல் பரவி வந்த நிலையில், தற்போது 30 கோடி தான் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ள நிலையில், 100 கோடி எல்லாம் சும்மா கதை தானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்