Nayan-Wikki: மனைவி நயனுடன் நீச்சல் குளத்தில் கூலாக பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில், குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் அதிகம் ஈர்க்கிறார்கள். சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா, தனது இரட்டைக் குழந்தைகளுடன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

குடும்ப வாழ்க்கையை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு, சினிமா வேலைகளில் பிஸியாக இருக்கிறார். மேலும் வழக்கமான அப்டேட்களை வெளியிடுவதன் மூலம் தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இன்று (செப் 18) தனது 38வது பிறந்தநாளான கொண்டாடி வருகிறார். இந்நிலையில், தனது மனைவி நயனுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக அனுபவைத்த தருணத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ரொமான்டிக் புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

WikkyNayan
WikkyNayan [Imagesource : @NayantharaU]

அந்தப் புகைப்படத்தில், நயன்தாரா படம் எடுக்கும் விக்னேஷைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்பொழுது இணயத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, ஒரு க்ரின்ச் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்மறையான கமெண்ட்ஸ்களை பெற்று கொண்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

நயன்தாரா கடைசியாக ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜெயம் ரவியுடன் நடித்த ‘இறைவன்’ படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செப்டம்பரில் இரண்டாவது ரிலீஸ் ஆக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்