Jawan Box Office : வந்த இடம் வசூல் காடு! ஜவான் படத்தின் 10 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Jawan box office

பதான் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ  இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,  ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

தமிழும் படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்பதற்காக வில்லனாக நடிகர் விஜய்சேதுபதியையும், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் அட்லீ நடிக்க வைத்தார். படத்தில் அவர்கள் நடித்த கதாபாத்திரமும் கொண்டாடப்பட்டடு பாலிவுட்டிலும் இவர்களுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவது போல் வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் வெளியான 9 நாட்களில் மொத்தமாக 735 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், அடுத்ததாக 10 நாட்களில் படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜவான் திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 597 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற வந்த இடம் என்காடு பாடல் வரியை போல வந்த இடம் வசூல் காடு என ஜவான் படம் வசூலை குவித்து வருகிறது. படத்திற்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் காரணம் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்