EPS Case : இபிஎஸ்க்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை வழக்கு.! உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.! 

ADMK Chief Secretary Edappadi Palanisamy

கடந்த 2018ஆம் ஆண்டு திமுக பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தமிழக லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலை துறையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார்.

 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி  தனது உறவினர்களுக்கு அளிக்க அதிகாரத்தை பயன்படுத்தினார் என்றும், இதில் கோடி கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீது அப்போது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திமுக ஆர்.எஸ்.பாரதி தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகு பல்வேறு கட்டங்கள் கடந்து அந்த வழக்கை உயர்நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் , உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் லஞ்சஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் வாதிட்டார். இபிஎஸ் தரப்பில் அரியமா சுந்தரம் வாதிட்டார்.

இதில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபில் வாதிட்டதை எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையாக எதிர்த்தது. ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் திமுக சார்பாக ஆஜரான கபில் சிபில் , தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வாதிடுகிறார் என எதிர்ப்பு தெரிவித்தார். இதனை அடுத்து கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்களுக்கு யார் ஆட்சி, எந்த வழக்கு என தெரியாது. அதனால், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்