V. I. P. : 3 நிமிஷ பாட்டுக்காக 40 லட்சத்துக்கு செட்! ‘விஐபி’ திரைப்படம் உருவான கதை!

v. i. p. (1997 film)

இயக்குனர் சபாபதி தெக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஐபி. இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, அப்பாஸ்,சிம்ரன், ரம்பா, மணிவண்ணன், அனு மோகன், ராமி ரெட்டி, அனுபம் கெர், பாத்திமா பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் நடிகர் சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த சமயமே இந்த விஐபி திரைப்படம் நல்ல தொகையில் உருவானது. பட்ஜெட்டிற்கு ஏற்றது போல வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. காதல் கலந்த நகைச்சுவை கதையம்சத்தை கொண்ட இந்த படம் அந்த சமயம் பலருக்கு பிடித்தது என்றே கூறலாம்.

படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் ரசித்தி ரசித்து இயக்குனர்  சபாபதி தெக்ஷிணாமூர்த்தி எடுத்திருப்பார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்த  படத்தில் வரும் ஒரு பாடல் காட்சிக்காக அந்த சமயமே 40 லட்சம் செலவு செய்திருந்தார்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு ஆச்சிரியத்தை கொடுக்கிறதா?

இது தகவல் மட்டும் இல்லை உண்மையில் இந்த படத்தில் இடம்பெற்ற வந்ததே லக்கு வந்ததே லக்கு பாடலுக்காக கிட்டதட்ட 40 லட்சத்திற்கு செட் போடப்பட்டதாம். சில நிமிடங்கள் இந்த பாடல் படத்தில் வரும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எதிர்பார்த்தாராம். ஆனால், பல மணி நேரங்கள் எடுக்கப்பட்டு அந்த பாடல் 3 நிமிடம் மட்டும் தான் படத்தில் வந்ததாம்.

பிறகு இவ்வளவு லட்சத்தில் செட் போட்டு அதனை இடித்தால் நன்றாக இருக்காது என்பதால் அப்டியே அந்த செட்டை வாடகைக்கு கலைப்புலி தாணு விட்டுவிட்டாராம். இருப்பினும் இவ்வளவு செலவு செய்து அந்த பாடல் எடுக்கப்படும் பாடல் 3 நிமிடம் மாட்டுமே வந்தது தயாரிப்பாளருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்