HBDPeriyar: அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்.! பெரியாரின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

MKStalinGreetings

இந்திய சமூக ஆர்வலரான தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள் பலரும், வேலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும்  சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிராக சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர். இதற்கிடையில், பெரியாரின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து – மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.”

“தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்