டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 5வது நாளாக ஆளுநர் இல்லத்தில் தர்ணா போராட்டம்!

Default Image

5வது நாளாக இன்று ஆளுநர் இல்லத்தில்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தம் வீட்டை மறந்தது ஏன்?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் டெல்லி துணை நிலை ஆளநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில் நான்காவது இரவை சோபாவில் தூங்கியபடி கழித்தனர். சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டில் இருந்து புத்தகங்கள், இன்சுலின் ஊசிகள், மருந்து மாத்திரைகள், உணவு, மாற்று உடைகள் போன்றவை கொடுத்து அனுப்பப்படுகின்றன.

எதற்காக இந்த தர்ணா போராட்டம்? ஆளுநர் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுப்பதில்லை என்று கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். என்ன கோரிக்கைகள்?

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். பணிக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கும் வராத அதிகாரிகள் மீது அத்தியாவசிய சேவைகள் சட்டமான எஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேசன் கார்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் போன்றவை முக்கியக் கோரிக்கைகளாகும்.

நான்கு மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது.ஆளுநரும் மத்திய அரசும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தூண்டி விடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டெல்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டுகிறது. டெல்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள கெஜ்ரிவால், இப்பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்