16 Vayathinile : ரஜினி கன்னத்தில் அறைந்த கமல்! “16 வயதினிலே” படம் உருவான விதம்!
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் ஒன்றாக நடித்து வந்தார்கள். இதுவரை பல படங்களில் ஒன்றாக இவர்கள் நடித்திருந்தாலும் பலருக்கும் பேவரைட் திரைப்படமாக இருப்பது இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1977 -ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே” படம் தான். இந்த படத்தில் கமல்ஹாசன் சப்பானி எனும் கதாபாத்திரத்திலும், ரஜினிகாந்த் பரட்டையன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
மேலும், ஸ்ரீதேவி, சத்யஜித், கவுண்டமணி, காந்திமதி, கே.பாக்யராஜ், கே. ஆர்.விஜயா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தை விட கமல் நடித்த சப்பானி கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது.
அந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது நடிகர் கமல்ஹாசன் இல்லயாம். நடிகர் நாகேஷை தான் நடிக்க வைக்க இயக்குனர் பாரதி ராஜா திட்டமிட்டு இருந்தாராம். ஏனென்றால், பிளாக் அன் ஒயிட் கலரில் தான் முதலில் படத்தை எடுக்க அவர் திட்டமிட்டு இருந்தாராம்.
பிறகு கலரில் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என யோசித்து கலரில் எடுக்க கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்து அவரிடம் பேசி சம்மதம் வாங்கி நடிக்க வைத்தாராம். படத்தில் கமல்ஹாசன் நொண்டி நொண்டி நடந்த காரணத்தால் அவரை பலரும் சப்பானி… சப்பானி என்று அழைப்பார்கள்.
ஒரு கட்டத்தில் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி உன்னை யார் சப்பானி என்று அழைத்தாலும் கன்னத்தில் அறைந்துவிடு என்று கமல்ஹாசனிடம் கூறுவார். அந்த சமயம் சரியாக ரஜினிகாந்த் சப்பானி என்று கூற வேகமாக சென்று கமல்ஹாசன் அவருடைய கன்னத்தில் அறைந்துவிடுவார். அந்த சமயம் இதைப்போன்று காட்சிகள் இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
அதைப்போல இந்த சமயமெல்லாம் காட்சி வைத்திருந்தால் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே பாரதி ராஜா கமலின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டு போய் நீ ஹீரோ ரொம்பவே நொண்டி நொண்டி நடந்து நடிக்கவேண்டாம் என கூறினாராம். பாரதி ராஜா அப்படி கூறவில்லை என்றால் கமல்ஹாசன் இன்னுமே நிஜமாக நடித்திருப்பாராம்.
இந்த படத்தில் வரும் பல முக்கியமான காட்சிகள் மைசூர் மற்றும் கொள்ளேகலில் படமாக்கப்பட்டது. அந்த சமயமே வித்தியாசமாக எடுக்கலாம் என்று எண்ணி ஸ்லோ மோஷனை படமெடுக்கும் கேமராவை வாங்கி படம் எடுக்கலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்ததாம். ஆனால், பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்லோ மோஷனை படமெடுக்கும் கேமராவை படக்குழுவினரால் வாங்க முடியவில்லை.
இருப்பினும் எந்த அளவிற்கு ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு ஒரு நல்ல படத்தை கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை வைத்து பாரதி ராஜா கொடுத்தார். இந்நிலையில், “16 வயதினிலே” திரைப்படம் வெளியாகி இன்றுடன் (செப்டம்பர் 15) 46 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தால் அழியாத எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் நிலையில், இந்த படமும் அந்த வரிசையில் இருக்கும்.