சென்னை அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் குழுவின் இன்றைய ஆய்வை ரத்து !
சென்னை அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் குழுவின் இன்றைய ஆய்வை ரத்து செய்துள்ளனர்.
முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் இன்று காலை 10.30 மணிக்கு ஆய்வு செய்வதாக அறிவித்தனர்.
மேலும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2 அறைகளிலும் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் ஆய்வு நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது சென்னை அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் குழுவின் இன்றைய ஆய்வை ரத்து செய்துள்ளனர்.மற்றொரு நாளில் அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு நடத்த விசாரணை ஆணைய வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்ய போதிய ஏற்பாடு செய்யாத காரணத்தினால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.