Banana Snack : வாழைப்பழத்தை வச்சி இப்படி கூட ஒரு டிஸ் பண்ணலாமா? செஞ்சி பாருங்க டேஸ்ட் அள்ளும்!

Banana Snack

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் என்றால் வாழைப்பழம் என்று கூறலாம். பொதுவாகவே நாம் உணவுகளை சாப்பிட்ட பின்னர் சீரணமாவதற்காக வாழைப்பழத்தை உண்ணும் பழக்கம் நம்மிடம் உண்டு. ஒரு சிலர் தினமும் வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுவார்கள்.

அப்படிப்பட்ட வாழைப்பழ பிரியர்களுக்கு வாழைப்பழத்தை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட ஒரு அருமையான டிஸ்-ஐ நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்த, வாழைப்பழ டிஸ்-ஐ  எப்படி செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை விவரமாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் 

  • 5 வாழைப்பழங்கள்
  • நெய்
  • முந்திரி
  • உலர்திராட்சை
  • தேங்காய்
  • மைதா மாவு (1 கப்)
  • சர்க்கரை

செய்முறை 

முதலில் நமக்கு தேவையான5 வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு இட்லி வேகவைக்கும் குக்கரில்   வாழைப்பழத்தை வேகவைக்கவேண்டும். அதன்பின் வேக வைத்த வாழைப்பழங்களை எடுத்து அதனுடைய தோலை நீக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் தேவையான அளவிற்கு முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

பின்பு தேங்காய் தேவையான அளவிற்கு துருவி எடுத்துக் கொண்டு அதனுடன் முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இவை அனைத்தையும்  பொன் நிறத்தில் வந்தவுடன் அதற்கு மேலே தேவையான அளவிற்கு சர்க்கரையும் சேர்த்து நன்கு கிளறி விட  வேண்டும்.

அதன்பிறகு முன்பு தயார் செய்து வைத்திருக்கும் வாழைப்பழங்களை ஒன்றாக சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிசையும் போது 1 கப் மைதா மாவு மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வந்தவுடன் கையில் ஒரு உருண்டை எடுத்து, வாழை இலையில் நெய் தடவி அதில் வைத்து சப்பாத்தியை  தயார் செய்வது போல எடுத்துக்கொள்ளவேண்டும்.

Banana Ada
Banana Ada [Image source :@Village Cooking – Kerala]

பிறகு, அதற்கு மேல் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் உலர் திராட்சை முந்திரி கலவையை மேலே பரப்பி  கொள்ளவேண்டும். அதற்கு  மேலே குறிப்பிட்டது போல படத்தில் காட்டப்பட்டது படி,  பிசைந்து வைத்திருந்த அந்த வாழைப்பழ மாவையும் அதற்கு மேல் வறுத்து வைத்திருந்த அந்த தேங்காய்  உலர் திராட்சை முந்திரி கலவையை கிட்டத்தட்ட 3 அடுக்குகளாக  வைத்துவிட்டு பின் இட்டலி குக்கரில்  வேக வைக்கவேண்டும்.

இதையும் படியுங்களேன்- Pacharisi Payasam : பக்காவான பச்சரிசி பாயாசம் செய்வது எப்படி? அசத்தலான செய்முறை இதோ!

15 நிமிடம் வேக வைத்துவிட்டு எடுத்து பாருங்கள் சுவையான வாழைப்பழ டிஸ் ரெடி. இதனை வெளியே எடுத்தவுடன் கேக் போல கட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அந்த சுவை உங்களுடைய நாக்கில் அப்படியே நிற்கும். இந்த மாதிரி சுவையான டிஸ்-ஐ வீட்டில் கிடைக்கும் எளிமையான பொருட்களை வைத்தே செய்யலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்