Monday, June 3, 2024

1YrOfCultClassicVTK : ஒரு ஆண்டுகளை நிறைவு செய்த வெந்து தணிந்தது காடு! உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார். மாநாடு படம் சிம்புவுக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. அது ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம் இதற்கு முன்பு சிம்பு கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்று இருந்தது.

எனவே, இந்த ஹிட் கம்போ நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த காரணத்தாலும் படத்தின் மீது மிக்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது.  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல படமும் நன்றாக இருந்த காரணத்தால் படம் ரசிகர்களுக்கு பிடித்து போக படத்தை கொண்டாடினார்கள்.

இந்த திரைப்படத்தில் இது சித்தி, ஜாபர் சாதிக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம், கயாது லோஹர், கீதா கைலாசம், அஸ்மீனா காசிம், விஜய் சத்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் உலகம் முழுவதும் 85 கோடி வரை வசூல் செய்து சிம்புவுக்கு பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் (செப்டம்பர் 15) 1 ஆண்டுகளை நிறைவுபெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

RELATED ARTICLES