மீண்டும் 11ஆம் வகுப்பு தேர்வை தவறவிட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

Default Image

அரசு தேர்வுகள் இயக்ககம், பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவர்கள் அல்லது, வருகை புரியாத மாணவர்கள், வருகிற 18 மற்றும் 19ஆம் தேதிகளில், சிறப்புத் துணைத் தேர்விற்கு, தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என  தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இந்தாண்டு முதன்முறையாக நடைபெற்ற பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, அதில் தோல்வியடைந்த மாணவர்களும், எதிர்பாராத காரணங்களால், தேர்வை தவறவிட்ட  மாணவர்களும், சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.

இதன்படி, வருகிற 18 மற்றும் 19ஆம் தேதிகளில், மாணவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனித்தேர்வர்களும், சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியிருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records