முதல்வரை நடிகர் விஜய் சந்தித்ததற்கு காரணம் இதுவா?
இந்த தீபாவளி அன்று இளைய தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மெர்சல்” திரைப்படம் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியினை உயர்த்தியது.இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கடந்த வாரங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் போராட்டதில் ஈடூபட்டனர்.வரும் தீபாவளி அன்று புதிய திரைபடங்கள் வெளியாகுமா… இல்லை ஆகாத என்ற சந்தேகம் இருந்தது.
பின்னர் தமிழக அரசு கேளிக்கை வரியினை 10% குறைத்தது.
இதற்கிடையில்சென்ற அக்டோபர் 15 தேதி நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் திரையரங்கதில் கேளிக்கைக்காண வரியை குறைத்ததற்காக நன்றி தெரிவிக்க முதல்வரை சந்தித்ததாக தகவல் தெரிகிறது.