Asia Cup 2023 : இலங்கை பந்துவீச்சில் தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்கள்.! மழையால் ஆட்டம் நிறுத்தி வைப்பு.! 

India vs Sri Lanka - Asia Cup 2023

இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்துவிட்ட நிலையில் தான் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டுள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இன்று தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.

கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்கள், சுப்மன் கில் 19 ரன்கள், விராட் கோலி 3 ரன்கள், கே.எல். ராகுல் 39 ரன்கள் , இஷான் கிஷன் 33 ரன்கள், ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் , ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் , அக்சர் படேல் 15 ரன்கள்  எடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்

தற்போது குல்தீப் யாதவ் மற்றும்  முகமது சிராஜ் ஆகியோர் களத்தில் நிற்கும் நிலையில் மழை குறுக்கிட்ட காரணத்தால்  ஆட்டம் 47 ஓவரில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து இருந்தது. இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி துனித் வெல்லலகே 5 விக்கெட்களையும், சரித் அசலங்க 4 விக்கெட்களையும் எடுத்து இருந்தனர்.

மழை குறுக்கிட்டு உள்ளதால், ஆட்டம் தொடங்க தாமதமாகி கொண்டே செல்கிறது. ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படுகிறதா.? அல்லது ஆட்டம் ரத்து செய்ய படுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot