Dengue Fever : தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்.. தலைமை செயலகத்தில் நோய் தடுப்பு ஆலோசனை தீவிரம்.!

TN Govt

இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள காரணத்தால், அதனை சமாளிக்க, அதன் மூலம் வரும் நோய் தொற்றுகளை தடுக்க, கண்காணிக்க தற்போது தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கனவே தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி நோய் பரவி வருகிறது. இது குறித்து இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் மெட்ராஸ்-ஐ தொற்று நோய் குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  , நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

தற்போது மழைக்காலம் வர உள்ளதால் டெங்கு உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது.

இதற்காக இன்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள், கொசு ஒழிப்பு பணிகள், சுகாதார பணிகள் மருந்து இருப்புகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்