MGR Nagaril : வயிறு குலுங்க நகைச்சுவை இருந்தும் தோல்வியான ‘எம்ஜிஆர் நகரில்’! காரணம் என்ன தெரியுமா?

MGR Nagaril movie

இயக்குனர் ஆலப்புழா அஷ்ரப் இயக்கத்தில் ஆனந்த் பாபு, சுகன்யா, விவேக், சார்லி, ஷங்கர்,பாண்டியன், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், சுமித்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “எம்ஜிஆர் நகரில்”.  இந்த திரைப்படத்தை மக்கள் ரசித்து பார்த்து சிரிக்கவேண்டும் என இயக்குனர் ஆலப்புழா அஷ்ரப்  அந்த சமயம் யோசித்து யோசித்து இயக்கி இருப்பார்.

படத்தின் கதைப்படி, நகரத்தில் இருக்கும் ஒரு புதிய அழகான பெண்ணைக் கவர நான்கு ஆண்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அந்த பெண் தன் சகோதரனின் கொலையை விசாரிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். இதனை அறிந்த அந்த நான்கு பேர் அந்த பெண்ணிற்கு உதவி செய்வது போல நடித்து அந்த பெண்ணிடம் நண்பர்களாக நடிக்கத் தொடங்குகிறார்கள், பிறகு, சமாளிக்க முடியாத காரணத்தால் சிக்கலில் சிக்குகிறார்கள்.

இதனை எந்த அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆலப்புழா அஷ்ரப் நகைச்சுவையான காட்சிகளை வைத்திருப்பார். இருப்பினும் அந்த சமயம் இந்த படம் பலருக்கும் பிடிக்கவில்லை என்பதால் மக்கள் இந்த படத்தை சரியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.

இந்த “எம்ஜிஆர் நகரில்” திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமே படத்தின் காமெடி காட்சிகள் இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் கலவை போல இருந்தது தான். காமெடி காட்சிகள் புதிதாக இருந்தாலும் வசனங்களும், கதையும் ஏற்கனவே வந்தது போல இருந்தது தான் தோல்வி அடைய காரணம்.  படத்தை பார்த்த பலரும் சுகன்யா கதாபாத்திரமும் நெப்போலியன் கதாபாத்திரமும் சரியாக இல்லை என அந்த சமயமே கூறினார்கள்.

இருப்பினும், ஒரு சிலருக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்த படமாக உள்ளது. ஆனந்த் பாபு, விவேக், சார்லி, ஆகியோர் தங்களால் முடிந்த அளவிற்கு படத்தில் காமெடி செய்து இருப்பார்கள். இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளர்களும், படக்குழுவும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை.

படம் சரியான வெற்றியை பெறவில்லை என்றாலும் கூட , படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆனது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களை இசையமைப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன் இந்த படத்திற்காக கொடுத்திருப்பார். “மசினி ஒருத்தி”, “மாசாய் மடம்”, “உடல் கொண்டா”, “எனகே எந்தன்” உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் இப்போது வரை கேட்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

இந்த பாடலை கேட்பதை தாண்டி வீடியோ பாடலாக பார்த்தீர்கள் என்றால் அந்த பாடல்களை கூட  காமெடி காட்சிகளால் ஆலப்புழா அஷ்ரப் எடுத்திருப்பார். எப்படி எடுத்திருந்தாலும் படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி தோல்வியை தழுவியது. இதே நாளில் தான் இந்த “எம்ஜிஆர் நகரில்” திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாக்க இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்