Onion Rice : வெங்காயம் மட்டும் போதுங்க..! சூப்பர் ரெசிபி ரெடி..!
வெங்காயம் என்பது சமையலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வெங்காயத்தை வைத்து நாம் பல வகையான உணவுகள் செய்வதுண்டு. வெங்காயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனேற்றங்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் குளுக்கோசினோலேட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது7.
தற்போது இந்த பதிவில், வெங்காயத்தை வைத்து செய்யக்கூடிய சோப்பரான ஒரு ரெசிபி பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- அரிசி – கால் கிலோ
- வெங்காயம் – 3
- பிரிஞ்சி இலை -ஒன்று
- பட்டை -1
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 3
- சோம்பு – சிறிதாவு
- கசகசா – சிறிதளவு
- மஞ்சப்பொடி – 1 ஸ்பூன்
- பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
Onion Rice செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரிசியை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் பிரிஞ்சு இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, கசகசா, வெங்காயம் உள்ளிட்டவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் மஞ்ச பொடி, பிரியாணி மசாலா, உப்பு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி விட்டு அதனுள் கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி விட்டு, அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தலையை தூவி அதனை மூடி வைத்துவிட வேண்டும்.
பத்து நிமிடங்கள் கழித்து அதனை இறக்கினால் சுவையான வெங்காயம் சாதம் தயார். இறக்கியவுடன் அதில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி விட்டால் பிரியாணி போல கம கம என்று வாசமாக இருக்கும்.
இதனை நம் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத நேரத்தில் வெறும் வெங்காயத்தை வைத்து மட்டும் இந்த சாதத்தை செய்யலாம். இதனை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.