ஜூலை 28 தேதி தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ட்ரைலர் வெளியீடு! நடிகர் தனுஷ் அறிவிப்பு
மீண்டும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ்-வெற்றி மாறன் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டும் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அள்ளின.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை, மிக பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது. படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
முதல் முறையாக சந்தோஷ் நாராயணன், வெற்றி மாறன் படத்துக்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.வடசென்னை படம் கடந்த 2 வருடங்களாக உருவாகி வருகிறது.
படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் ட்ரைலர் ஜூலை 28 தேதி வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
#VadaChennai part 1 trailer will be launched on 28th July & the movie will be a September release. @VetriMaaran @wunderbar films @LycaProductions @Music_Santhosh pic.twitter.com/x9X7syNvoM
— Dhanush (@dhanushkraja) June 14, 2018