Banana Leaf Halwa : வாழை இலையில் அல்வா செய்யலாமா..? அது எப்படிங்க..?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் பலவகை உள்ளது. முந்திரி அல்வா, தேங்காய் அல்வா, கேரட் அல்வா என பலவகை உண்டு. ஆனால், தற்போது இந்த பதிவில் வாழை இலையில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
- வாழை இலை – 1
- கான்பிளவர் மாவு – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- நெய் – 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
Banana Leaf Halwa செய்முறை
முதலில் வாழை இலையை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து பாத்திரத்தில் கான்பிளவர் மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வாழை இலை மற்றும் மாவு கலவையை சேர்த்து கிளற வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி , அதன் மேல் நமக்கு தேவையான முந்திரி பாதம் ஆகியவற்றை தூவி பின் பரிமாறலாம்.
வாழை இலையில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த ஆல்வா சுவை மிகுந்ததாக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாகவும் காணப்படுகிறது.